2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

‘கலந்துரையாடலில் கலந்து கொள்ளுங்கள்’

எம். றொசாந்த்   / 2018 ஒக்டோபர் 11 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முதலமைச்சர் தலைமையில் இடம்பெறும் கலந்துரையாடலில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை ம.சக்திவேல் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாளை கைதடியிலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் முதலமைச்சரின் தலைமையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் காலை 11 மணிக்கு கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இக்கலந்துரையாடலில் கைதிகளை நிபந்தனை அற்று விடுவிக்க வேண்டும் என கருதும் சிவில் சமூகங்கள், மக்கள் பிரதிநிதிகள், பல்கலைக்கழக சமூகத்தினர், செயற்பாட்டாளர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X