Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2021 ஜூன் 06 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
யாழ்ப்பாணம் - காக்கைதீவு இறங்குதுறையை விஸ்தரித்து தருமாறு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் காக்கைதீவு கடற்றொழிலாளர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்றையதினம் குறித்த இறங்குதுறைக்கான கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழிலாளர்களால் அமைக்கப்படவுள்ள இளைப்பாறு மண்டபத்துக்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்தார்.
அத்துடன், கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் அசௌகரியங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் தொடர்பாகவும், அமைச்சர் கலந்துரையாடியிருந்தார்.
இதன்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அதாவது, 2000ஆம் ஆண்டில், சுமார் 400 படகுகள் தொழிலில் ஈடுபட்டிருந்த நிலையில் அமைக்கப்பட்ட 50 அடி நீளமான இறங்குதுறையே, தற்போதும் காணப்படுவதாகத், கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், தற்போது சுமார் 800 படகுகள் சேவையில் ஈடுபட்டுள்ள நிiயில், இந்த இறங்குதுறையை விஸ்தரத்தித்து தருமாறும், கோரிக்கை முன்வைத்தனர்.
அத்துடன், பாரிய மீனபிடிக் கலன்களைப் பயன்படுத்தி தொழில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தை வெளியிட்ட பிரதேச கடற்றொழிலாளர்கள், கலன்கள் பயன்படுத்தக் கூடியவாறு இறங்குதுறை விஸ்தரிக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago