Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஓகஸ்ட் 12 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். தில்லைநாதன்
கடலுக்குச் சென்று காணாமல் போனவரை தேடித் தருமாறு தாய் கடந்த 04.08.2023 அன்று கடற்றொழிலுக்கென சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை என்றும், அவரை கண்டுபிடித்துத் தருவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் உதவுமாறும் காணாமல் போனவரின் தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சியில் நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
கடந்த 04 அன்று கடலுக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை என்றும், அவரை கடத்தியதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், கடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை நாகர்கோவில் பகுதியில் மடக்கிப் பிடித்த ஊரவர்கள் கடத்தல் தொடர்பில் ஒப்புக்கொண்ட நிலையில் அவரை பருத்தித்துறை போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், தெரிவித்துள்ள தாயார் மேலும் அவருடன் சென்ற ஒருவர் கஞ்சா கடத்தல் தொடர்பில் கைதாகி இருப்பதுவும் தெரிவித்துள்ளார்.
தனது மகன் வீடு திரும்பாத நிலையில் பருத்தித் துறை போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், பொலிஸாரும் அவரை தேடி வருவதாகவும், மேல் அதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ள தாயார், அவரை மீட்டுத் தருமாறும், கோரிக்கை விடுத்துள்ளார்.
இதே வேளை இந்தியாவிலிருந்து ஒருவர் தொடர்பு கொண்டு காணாமல் போனவர் கஞ்சா கடத்தலிற்க்கா இந்தியா வந்தவேளை தவறியுள்ளதாகவும் தெரிவித்ததாகவும் அன்றிலிருந்து அவரது தொலைபேசி செயற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். R
43 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
59 minute ago
1 hours ago