க. அகரன் / 2019 பெப்ரவரி 18 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா மடுக்கந்தை மயிலங்குளம் பகுதியில் கடந்த சனிக்கிழமை (16) அன்று வீட்டின் சமையலறையில் இருந்த காஸ் சிலிண்டர் வெடித்ததில் 16 வயதுடைய சிறுமியொருவர் கடும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (18) அதிகாலை சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் குறித்த சிறுமி சமைப்பதுக்கு காஸ் அடுப்பினை பற்றவைத்த நேரம் சிலிண்டர் வெடித்து சிதறியது.
உடனடியாக அயலவர்கள் குறித்த சிறுமியை மீட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
கடந்த இரு தினங்களாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (18) அதிகாலை சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளார்.
11 minute ago
21 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
21 minute ago
33 minute ago