Editorial / 2022 பெப்ரவரி 08 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கூழாமுறிப்பு பிரதேசத்தில் அனைத்து திணைக்களங்களின் அனுமதியோடும் வழங்கப்பட்டிருக்கின்ற அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி, முறைகேடாக அளவுக்கு அதிகமான கிரவல் அகழ்ந்து செல்லப்படுகின்றது.
இது தொடர்பாக மக்களால் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்பட்டு வந்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத நிலை காணப்பட்டது .
இந்நிலையில், நேற்று (07) குறித்த பகுதிக்கு மக்களின் முறைப்பாட்டுக்கு அமைய செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவர், இவ்விடத்துக்கு பொலிஸாரை அழைத்துள்ளார்.
அப்பகுதியில் அளவுக்கதிகமான கிரவல் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டு, அங்கு வந்த ஒட்டுசுட்டான் பொலிஸாரால் பைக்கோ இயந்திரம் கைப்பற்றப்பட்டு அதனுடைய சாரதியும் கைது செய்யப்பட்டார்.
இந்தக் கிரவல் அகழ்வுக்கு அனுமதி வழங்கிய திணைக்களங்கள் ஏன் கண்காணிப்புச் செய்யவில்லை என அப்பகுதி மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
அதேவேளை, புவிச் சரிதவியல் திணைக்களம் அவர்கள் வழங்கிய நிபந்தனைகளை பரிசீலித்து நடவடிக்கை மேகொள்ளவேண்டும் என்றும் தனியார் காணியை முறைகேடாக கிரவல் அகழ்வுக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது மாவட்டச் செயலகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
8 hours ago
8 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
17 Dec 2025