Freelancer / 2023 மார்ச் 03 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

சும்பிரமணியம் பாஸ்கரன்
இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலை ஊழியர்கள், இன்று (03) பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
“கிளிநொச்சி சாலையின் வருமானத்தை பாதிக்கும் வகையில், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு வழித்தடத்தில் ஒரே நேரத்தில் சேவைகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
“யாழ்ப்பாணம் - முல்லைத்தீவு, புல்மேட்டை ஊடாக திருகோணமலைக்குச் செல்லும் தமது பஸ்களுக்கு முன்னால் விசுவமடுவில் இருந்து திருகோணமலைக்கு செல்லும் தனியாருக்கு சேவையாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
“இதுவரை காலமும் கிளிநொச்சி, முல்லைத்தீவுக்கு சேவையாற்றும் படி கோரிக்கைகள் இருந்தும் இதுவரை இ.போ.சக்கு அனுமதி வழங்கப்படவில்லை” என்ற விடயங்களை சுட்டிக்காட்டியே குறித்த பணிப் பகிஷ்கரிப்பில் இன்று காலை முதல் கிளிநொச்சி இ.போ.ச ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். (N)
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago