Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 நவம்பர் 19 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், என்.ராஜ், செல்வநாயகம் ரவிசாந்
யாழ்ப்பாணம் - வேம்படி பெண்கள் உயர் தரப் பாடசாலையின் முன்னாள் அதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டு, குண்டுப் புரளியை ஏற்படுத்தும் அநாமதேயக் கடிதம், கண்டியிலிருந்தே அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினர்.
வேம்படி பெண்கள் உயர் தரப் பாடசாலையின் முன்னாள் அதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டு, குண்டுப் புரளியை ஏற்படுத்தும் அநாமதேயக் கடிதம் அனுப்பிய சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில், இன்று (19) நடைபெற்றது.
இதன்போதே, பொலிஸார், இது குறித்த அறிக்கையை மன்றில் முன்வைத்து, மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இதையடுத்து, வழக்கு விசாரணை, டிசெம்பர் 3ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
“வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில், இன்னும் ஒரு மாதத்தில் குண்டு வெடிக்கும்” என்று, ஆங்கில மொழியில் குறிப்பிடப்பட்டு திகதியிடப்படதாத அநாமதேயக் கடிதமொன்று, ஒக்டோபர் 31ஆம் திகதி, பாடசாலையின் முன்னாள் அதிபர் வேணுகா சண்முகரத்தினம் என்ற பெயரில், பாடசாலைக்கு கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago