Princiya Dixci / 2021 ஏப்ரல் 12 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ்
நல்லூர், பாணாங்குளம் பகுதியில் குப்பை போடுவதைத் தடுக்கும் நோக்குடன், நடராஜர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது.
எனினும், சிலை வைக்கப்பட்ட பின்பும் குப்பை போடப்படுவதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியில் நல்லூர் பாணாங்குளம் அமைந்துள்ளது. அதனைச் சூழ தொண்டு நிறுவனங்கள் உட்பட பல குடியிருப்புகள் அமைந்துள்ளன.
இந்தப் பகுதிக்கு வெளியில் இருந்து வரும் நபர்களாலேயே குப்பைகள் வீசப்படுவதாக பல தரப்பினரிடமும் முறையிடப்பட்டு, பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் குப்பைகள் வீசப்படுவதைத் தடுக்க முடியவில்லை.
அதனால் குப்பைகள் வீசப்படும் இடத்தில் திடீரென நடராஜப் பெருமானின் சிலையொன்று வைக்கப்பட்டது.
எனினும், சிலை வைக்கப்பட்ட பின்பும் அந்தப் பகுதியில் குப்பைகள் வீசப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
7 hours ago
8 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
20 Mar 2026