Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 14 , பி.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும், பொது மன்னிப்பின் அடிப்படையில், குறுகியகாலம் புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று, இன்று (14) முன்னெடுக்கப்பட்டது.
சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, அரசியல் கைதிகளின் உறவினர்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த கவனயீர்ப்புப் போராட்டம், யாழ்ப்பாணம் - நாவாந்துறை சந்தைப் பகுதியில் இன்றுக் காலை இடம்பெற்றது.
சகல தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்குவதன் மூலமோ அல்லது குறுகியகாலப் புனர்வாழ்வுக்குப் பின்னரோ விடுவிக்க, இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
அத்துடன், தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளால், மேற்படி கைதிகளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால், எதிர்வரும் வரவு -செலவுத் திட்டம் கையாளப்பட வேண்டுமென்றும், ஏனைய முஸ்லிம் மற்றும் பெரும்பான்மையின நாடாளுமன்ற உறுப்பினர்களும், இந்த விடயத்தில் தமிழ்த் தரப்பினருக்கு ஆதரவளிக்க வேண்டுமென்றும், போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
யாழ். மாநகர சபை உறுப்பினர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலர், இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
12 Jul 2025