Freelancer / 2022 மார்ச் 07 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
கொடிகாமம், மீசாலை வடக்கில் டெங்கு காய்ச்சல் காரணமாக ஒரு வயதும் 5 மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகீசன் விதுசன் என்ற குழந்தையே இதில் உயிரிழந்துள்ளான்.
கடந்த 6 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ஆயுள்வேத வைத்தியம் செய்யப்பட்டுள்ளது.
இதன் பின், சனிக்கிழமை பிற்பகல் ஐந்து மணிக்கு சாவச்சேரி மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டான்.
மேலதிக சிகிச்சைக்கு யாழ். போதனா மருத்துவமனைக்கு குழந்தை மாற்றப்பட்டான்.
எனினும் குழந்தை சிகிச்சை பயனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்ததாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
டெங்கு காய்ச்சல் காரணமாகவே குழந்தையின் இறப்பு இடம்பெற்றதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.
இதேவேளை, காய்ச்சலினால் பாதிக்கப்பட்டால் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (R)
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago