2025 மே 15, வியாழக்கிழமை

’கூட்டத்தில் கலந்துகொள்ளாதது மக்களைப் புறக்கணித்ததற்குச் சமம்’

Editorial   / 2020 பெப்ரவரி 02 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

ஜனவரி 31ஆம் திகதியன்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளாததை மக்களைப் புறக்கணிப்தாகவே தான் பார்ப்பதாக, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஜே81 கோட்டை கிராம உத்தியோத்தர் பிரிவில், இன்று (02), கிராமத்துக்கொரு வீடு எனும் செயத்திட்டத்தின் கீழ் வீடொன்றுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், மக்கள் பிரதிநிதிகள் என்ற  வகையில் மக்களுடைய அபிவிருத்தி சம்பந்தமாக முக்கியமான முடிவுகள் எடுக்கும் கூட்டமெனவும் அதனை ஒரு கட்சியினர் புறக்கணித்திருந்தார்கள்,  மற்றவர்கள் கலந்துகொள்ளவில்லையெனவும் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொள்ளாததை மக்களை புறக்கணிப்தாகவே தான் பார்ப்பதாகவும், அவர் கூறினார்.

அபிவிருத்தி என்பது மக்கள் சார்ந்த விடயமெனத் தெரிவித்த அவர், மக்கள் பிரதிநிதிகளாக கடந்த அரசாங்கத்தில் செய்யப்பட்ட வேலைத்திட்டங்களுக்கு இன்னும் பணம் கிடைக்காமல் இருந்தால் அதை பற்றி கூட பேசுவதற்கு வரதவர்கள் எப்படி மக்களுக்கான வேலைத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்திகளை கொண்டுபோய் சேர்க்கப்போகின்றார்களெனவும் வினவினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .