Editorial / 2020 ஜூலை 05 , பி.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த அரசாங்கத்தில் கூட்டமைப்பு முன்னெடுத்த இராஜதந்திர நடவடிக்கைகளே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியல் தீர்வு பற்றியும் மனிதவுரிமை பற்றியும் அடிக்கடி பேசுவதற்குக் காரணமென, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், அவர் நேற்று (05) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், முதற்றடவையாக, இலங்கையின் இணை அனுசரணையுடன் ஒரு பிரேரணையை கொண்டுவந்து, பொறுப்புக்கூறல் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டமையே, இன்று மஹிந்த ராஜபக்ஷவை தீர்வுத் திட்டம் தொடர்பில் பேச வைத்துள்ளதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த அரசாங்க காலத்தில் கூட்டமைப்பு மேற்கொண்ட மிக முக்கியமான நகர்வாகுமெனத் தெரிவித்துள்ள அவர், தற்போதைய அரசாங்கம் அதிலிருந்து விலகவும் முடியாமல் நடைமுறைப்படுத்தவும் முடியாமல் தடுமாறி வருவதாதகவும் கூறியுள்ளார்.
எனவே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் காத்திரமான நடவடிக்கைகளை உணர்ந்து கொண்டு, தமிழ் மக்களுக்காக சரியான நேரத்தில், சரியான முடிவுகளை எடுத்து ஆக்கபூர்வமாக பயணிக்குமெனவும், அற்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .