Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 05 , பி.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். நிதர்ஷன்
“தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கிலுள்ள முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலத்தினால் பாதகமான விளைவுகளை எற்படுத்தும்” என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட்டின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தாத்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கூட்டமைப்பிலிருந்து முதலமைச்சர் வெளியெறுவதையும் விலத்தப்படுவதையும் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள சித்தார்த்தன் அந்தப் பொறுப்பை உணர்ந்து நிதமானமான முடிவை முதலமைச்சர் விடயத்தில சம்பந்தன் எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். சுன்காகம் கந்தரோடையிலுள்ள அவருடைய வீட்டில் இன்று பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் அடுத்த வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் இப்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தான் இருக்கின்றார். அடுத்த தேர்தலில் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவாரா இல்லையா என்பது அவருடைய தனிப்பட்ட முடிவாகும்.
முதலமைச்சர் கூட்டமைப்பிலிருந்து விலகுவதான முடிவெடுத்தால் அது பாதகமான முடிவாக இருக்கும். அந்த முடிவ நிச்சயமாக தமிழ் மக்களுக்கு பெரும் பதகமான விளைவை ஏற்படுத்தும். குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் முதலமைச்சருக்கு கணிசமான செல்வாக்கு உள்ளது. இதனால் தேர்லில் அவர் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து போட்டியிடும்போது தமிழ் மக்களின் வாக்குகள் இரண்டாக பிரிவடையும். இதனை தடுத்து நிறுத்த வேண்டியது கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் பொறுப்பாகும். அந்த பொறுப்பை உணர்ந்து நல்ல முடிவை சம்பந்தன் எடுப்பார் என்று நம்புகின்றேன்.
வட மாகாண சபைத் தேர்தலின்போது கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக யார் களமிறக்கப்படுவார்கள் என்று இப்போது கூற முடியாது. ஏனெனில் தென்னிலங்கை அரசியல் நிலவரங்களைப் பார்க்கும் போது மாகாண சபைகளுக்கான தேர்தல் ஓராண்டு கால இழுத்தடிப்பு செய்யப்பட்ட பின்னரே நடத்தப்படும் என்ற நிலையில் உள்ளது.
இந்நிலையில், கூட்டமைப்பின் சார்பில் வடக்கு முதலமைச்சராக யார் தேர்தலில் நிறுத்தப்படுவார்கள் என்று விவாதங்களை செய்து மேலும் குழப்பங்களை ஏற்படுத்தக் கூடாது என்று நினைக்கின்றோம். முதலமைச்சர் விக்னேஸ்வரனை நாங்கள் தான் கொண்டு வந்தோம். எங்களுக்குள் தனிப்பட்ட ரீதியில் கோபதாபங்கள் இருந்தாலும் அதனை பேசி தீர்க்க வேண்டும்.
சுமந்திரனுக்கும் முதலமைச்சருக்கும் இடையில் உள்ள தனிப்பட்ட பிரச்சினை காரணமாகத்தான் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலை தொடரக் கூடாது. இந்நிலை தொடருமாக இருந்தால் அது கூட்டமைப்புக்கு ஆரோக்யமானதாக இருக்காது. அது மக்கள் மத்தியல் வெறுப்புணர்வை கொண்டுவரும். மேலும் முதலமைச்சரை தபால்காரன் போன்று சுமந்திரன் முன்வைத்த விமர்சனங்கள் ஏற்புடையவையல்ல.
தமிழரசுக் கட்சிக்குள் உள்ள பலர் விக்னேஸ்வரனை அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தக் கூடாது என்ற சிந்தனையில் உள்ளார்கள். தமிழரசுக் கட்சியில் இருந்தே கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் நிறுத்தப்படுவர் என்றே அக்கட்சியினர் கூறுகின்றனர். அதேவேளை அங்கத்துவ கட்சிகளில் முதலமைச்சருக்கு தகுதியானவர் உள்ளார்களா இல்லையா என்பதற்கு அப்பால் தமிழரசுக் கட்சியினர் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிலிருந்து ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தும் சிந்தனையில் இருக்க மாட்டார்கள்.
எனவே, அடுத்து வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சி முடிவு எடுத்த பின்னரே கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ரெலோ, புளொட் போன்ற கட்சிகள் அது தொடர்பில் சிந்திக்க முடியும். ஆனால், இதுவரையில் வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கட்சிகளுக்குள் தீவிரமாக ஆராய்வுகளையோ அல்லது பேச்சுகளையே செய்யவில்லை “என்றார்.
15 minute ago
26 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
26 minute ago
39 minute ago