2025 மே 07, புதன்கிழமை

கையூட்டுப் பெற்ற பொலிஸாருக்கு எதிராக விசாரணை

Niroshini   / 2021 ஜூன் 16 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

பயணக் கட்டுப்பாடு காலப்பகுதியில், அனுமதிப்பதிரத்துடன் வியாபாரத்தில் ஈடுபட்ட மீன் வியாபாரி ஒருவரிடம் கையூட்டுப் பெற்ற கோப்பாய் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றை அடுத்து, விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு காலத்தில், நடமாடும் மீன் வியாபாரிகளுக்கு, நல்லூர் பிரதேச செயலாளரால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

அதனைப் பயன்படுத்தி மீன் வியாபாரித்தில் ஈடுபட்ட வியாபாரி ஒருவரை அச்சுறுத்திய கோப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், அவரிடம் இருந்து கையூட்டுப் பெற்றுள்ளனர்.

பணத்தை வழங்கிய மீன் வியாபாரி, தனது பகுதி கிராம அலுவலகர் ஊடாக நல்லூர் பிரதேச செயலாளரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்.

இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயர்மட்டத்துக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் முதல் கட்டமாக, கையூட்டுப் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களை மீன் வியாபாரி அடையாளம் காட்டியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கண்காணிப்பில் இடம்பெற்று வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X