Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 மார்ச் 24 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
மாகாணப் பாடசாலைகளை, தேசியப் பாடசாலைகளாக தரமுயர்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாதெனத் தெரிவித்த ஈ.பீ.அர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஆகவே, மாகாணப் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துமாறு முன்வைத்த கோரிக்கை விண்ணப்பங்களை, அதிபர்கள் மீளப்பெற்றுக் கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
யாழ்ப்பாணம் - கட்டப்பிராயிலுள்ள அவரது இல்லத்தில், நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், வடக்கு மாகாணத்தில், மொத்தமாக 1,010 பாடசாலைகள் இருப்பதாகவும் அதில், 22 தேசியப் பாடசாலைகள், 6 தனியார்ப் பாடசாலைகளாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், ஏற்கெனவே இங்கு 22 தேசியப் பாடசாலைகள் இருக்கின்ற நிலையில், மேலதிகமாக 8 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துமாறு கோரி, வடக்கு மாகாண ஆளுநருக்குக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தத் தேசியப் பாடசாலைகளுக்கும் மாகாணப் பாடசாலைகளுக்கும் இடையில் பாடவிதானங்கள் சம்பந்தமாகவோ அல்லது வேறு வழிகளிலோ எந்தவிதமான வித்தியாசங்களும் கிடையாதெனத் தெரிவித்த அவர், இப்பொழுது அந்தத் தேசியப் பாடசாலைகளுக்கு அரசாங்கம் கூடுதலான நிதி ஒதுக்குகின்றதென்றக் காரணத்தைக் காட்டி, பல பாடசாலைகளின் அதிபர்கள், தங்களது பாடசாலைகளையும் தேசியப் பாடசாலைகளாகத் தரமுயர்த்துமாறு கோரிக்கை விடுத்து வருவதாகவும் கூறினார்.
அவ்வாறு இந்தப் பாடசாலைகள், தேசியப் பாடசாலைகளாகத் தரமுயருமாக இருந்தால், மாகாணப் பாடசாலைகளையும் மீண்டும் மத்திய அரசாங்கத்துக்கு கொடுக்கப்பட்டு, தேசியப் பாடசாலைகளாகத் தரமுயர்த்த வேண்டிய சூழல் ஏற்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
தமது பாடசாலைகள் தேசியப் பாடசாலைகளாகத் தரமுயர்த்தப்பட்டால், தமக்குப் பெருமை கிடைக்குமென்று அதிபர்கள் நினைப்பதாகவும், ஆனால் அது முற்றிலும் தவறானதொரு பார்வையெனவும், அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
17 May 2025
17 May 2025