2025 மே 14, புதன்கிழமை

சட்டவிரோதக் கட்டடங்களை இடிப்பதற்கு முடிவு

Editorial   / 2020 பெப்ரவரி 04 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

சாவகச்சேரி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அனுமதி பெறப்படாமல் நிர்மாணிக்கப்பட்ட மதில் உள்ளிட்ட கட்டடங்கள் இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக, சாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளர் க.வாமதேவன் தெரிவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், ஒரு சில சட்டவிரோதக் கட்டடங்களை இடிப்பதற்கு நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில், பிரதேச சபைக்கு உடனடியாகத் அறிவிக்குமாறு, கிராம அலுவலருக்கும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாகவும், அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .