Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 12 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வுகளில், தேவையற்ற விடயங்கள் தொடர்பில் ஆராயப்படுவதாக, தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகர சபையில் ஏற்பட்ட குழப்பம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், அண்மையில் நடைபெற்ற அமர்வின்போது, குலம், கோத்திரம் பற்றி பேசியதாலேயே, உறுப்பினர்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் இவை தவிர்க்கப்பட வேண்டியவையெனவும் கூறினார்.
சபையில் பேசப்பட வேண்டிய எவ்வளவோ விடயங்கள் உள்ளனவெனத் தெரிவித்த அவர், அவ்வாறிருக்க சபை அமர்வுகளில் தேவையற்ற விடயங்கள் தொடர்பில் ஆராய்வது ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகுமெனவும் கூறினார்.
எனவே, யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினர்கள் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் இல்லையெனில் மக்கள்தான் தீர்மானம் எடுக்க வேண்டி வருமெனவும், சிவாஜிலிங்கம் கூறினார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago