2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

சமாதானம் செய்ய முயன்றவருக்கு ஏற்பட்ட நிலை

Freelancer   / 2022 ஜனவரி 15 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.ஓட்டுமடம் - காக்கைதீவு வீதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த மர்ம கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றது. 

நேற்று இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக மேலும் தொியவருவதாவது,

ஓட்டுமடம் - காக்கைதீவு வீதியில் ஒரு இளைஞரை மற்றொரு இளைஞர் குழு தாக்குவதை அப்பகுதியால் வாகனத்தில் வந்த ஒருவர் அவதானித்துள்ளார். 

இதனையடுத்து வாகனத்தை நிறுத்திய அவர் சமாதானமாக பேசி பிரச்சினையை முடித்துவைக்க முயற்சித்த நிலையில், சமாதானம் பேச முயற்சித்தவர் மீதும், அவருடைய வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்த ஒரு குழுவினர் முயற்சித்துள்ளனர்.

இதனையடுத்து அந்த பகுதியால் சிவில் உடையில் வந்த பொலிஸார் என கூறப்படும் நபர்களை கண்டதும்  குழப்பம் விளைவித்த குழு அங்கிருந்து சென்றுள்ளது. 

இந்த நிலையில் சமாதானம் பேசுவதற்கு சென்றவரையும், தாக்குதலுக்கு இலக்கான இளைஞனையும் அங்கு சிவில் உடையில் வந்த பொலிஸார் என கூறிய நபர்கள் அழைத்து சம்பவம் தொடர்பாக  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யுங்கள். என ஆலோசனை வழங்கியிருக்கின்றனர். 

அதற்கமைய இருவரும் பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த நிலையில்,

 சமாதானம் பேச முயற்சித்தவரின் வீட்டிற்குள் வாள்கள் மற்றும் கம்பிகளுடன் நுழைந்த ரவுடிகள் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொருக்கியதுடன், கதவுகளை வாளால் வெட்டி அட்டகாசம் புரிந்ததாகவும் வீட்டிலிருந்த ஒரு தொகை பணத்தை எடுத்து சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததாக அறிய முடிகின்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .