Editorial / 2022 பெப்ரவரி 17 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்
அரசு ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக இன்று (17) காலை துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் மற்றும் தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் இந்தத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
அரச ஊழியர்களின் சம்பளத்தை 15,000 ரூபாயால் அதிகரிக்குமாறும், பதவி உயர்வு முறையொன்றையும் கடமைப் பட்டியலும் அடங்கிய அபிவிருத்தி உத்தியோகத்தர் புதிய சேவைகள் யாப்பொன்றை தயாரிக்குமாறும், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் புதிய சேவைகள் யாப்பொன்றை தயாரிக்குமாறும் இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மேலும், சகல அபிவிருத்தி உத்தியோகத்தர்களினதும் பறிக்கப்பட்ட சேவைக் காலத்தை நிரந்தர சேவையில் இணைக்குமாறும், 2016இன் பின்பு அரச சேவைக்கு வந்த அனைவரினதும் பறிக்கப்பட்ட ஓய்வூதிய உரிமையை மீண்டும் வழங்குமாறும் கோரப்பட்டது.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025