Editorial / 2020 மார்ச் 19 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
யாழ்ப்பாணத்தின் சுற்றுலாத் தளமையாமாக விளங்குகின்ற வேலணை - சாட்டி கடற்கரைக்குச் செல்வதற்கும் அங்கு ஒன்று கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, வேலணைப் பிரதேசசபைத் தவிசாளர் அறிவித்துள்ளார்.
கொரோனா அச்சம் காரணமாக, மக்களின் நன்மை கருதியே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், நாட்டில், கொரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றதெனவும் கூறினார்.
பொது மக்கள் ஒன்று கூட வேண்டாம் என்றும் தேவை ஏற்படின் ஒரு சிலர் வெளியே வந்து அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுமாறும், அவர் பணித்துள்ளார்.
மக்களின் நன்மை கருதி, அரசாங்கத்தின் இந்தத் தடுப்பு நடவடிக்கைக்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் பொது மக்களின் நன்மை கருதியும் தற்காலிகமாக சாட்டி கடற்கரைக்கு வருவதையும் ஒன்று கூடுவதையும் தவிர்குமாறு, கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
44 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
49 minute ago
2 hours ago