Niroshini / 2021 மே 13 , பி.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
மானிப்பாய் - உரும்பிராய் வீதியில், கடந்த 9ஆம் திகதியன்று இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த தாயும் மகனும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில், சிகிச்சை பலனின்றி, இன்று உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் வல்வெட்டித்துறை - வேம்படியைச் சேர்ந்த மோகனதாஸ் பிறேமாவதி (வயது-68) என்ற தாயாரும் அவரது மகனான மோகனதாஸ் திலீபன் (வயது-32) என்பவருமே உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வழிபட காரில் பயணித்த போதுஇ மானிப்பாய் - உரும்பிராய் வீதியில் கார் வேகக்கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளாகியது.
அதில் காரை ஓட்டிச்சென்ற மகனும் அவரது அவரது தாயாரும் படுகாயமடைந்தனர். காரில் பயணித்த மேலும் ஐவர் காயமடைந்தpருந்தனர்.
6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
9 hours ago