Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 20 , பி.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம். றொசாந்த்
யாழ்ப்பாணம் புத்துார் சிறுப்பிட்டி - கலையொளி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதுடன், பெற்றோல் குண்டும் வீசியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
வாகனம் ஒன்றில் வந்த ஐந்து பேரைக் கொண்ட வன்முறை கும்பல் ஒன்றே தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வீட்டின் மீது பெற்றோல் குண்டையும் வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளது.
குறித்த சம்பவம் தனிப்பட்ட பகை காரணமாக இடம்பெற்று இருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அண்மையில் வீதி ஓரத்தில் இருந்து வாள் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago