Freelancer / 2022 நவம்பர் 11 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - ஏழாலை பகுதியில் நேற்று 4 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்றினால் வீடொன்று தீக்கிரையாக்கப்பட்டள்ளது.
குறித்த வீட்டினுள் நேற்றைய தினம் உட்புகுந்த நால்வர் அடங்கிய வன்முறை கும்பல் வீட்டில் இருந்தோரை அச்சுறுத்தி வீட்டுக்கு தீ வைத்துள்ளனர்.
தீ வீடு முழுவதும் பரவியதில் வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.
குறித்த வீட்டில் வசிக்கும் 15 வயதான சிறுமியை தனக்கு திருமணம் செய்து தருமாறு இளைஞன் ஒருவர் வற்புறுத்தி வந்ததாகவும், அதற்கு வீட்டார் சம்மதிக்காத நிலையில், இளைஞனின் குழுவால் அவர்களுக்கு அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வந்த நிலையில், அந்த குழுவினரே வீட்டினுள் நுழைந்து வீட்டுக்கு தீ வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். R
52 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
2 hours ago