Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Editorial / 2022 மார்ச் 08 , பி.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ராஜ்
சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் வருடாந்தம் அதிகரித்துச் செல்வதாகவும் எனவே, அதனைக் கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.
“நாடும் தேசமும் உலகமும் அவளே” எனும் தொனிப்பொருளில், யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (08) நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், “தற்போதைய நிலையில் ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்து துஷ்பிரயோகத்தை தடுக்கக் கூடிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கு நாங்கள் முன் வருவோமாக இருந்தால், அது ஏனைய மட்டங்களில் மாற்றத்தை கொண்டுவரும்.
“சிறுவர், பெண்கள் துஷ்பிரயோகமானது கட்டாயமாகத் தவிர்க்கப்பட வேண்டிய தொன்று. அத்தோடு, சமூகத்தில் காணப்படுகின்ற ஏற்றத் தாழ்வுகளையும் ஏனைய பிரச்சினைகளையும் குறைப்பதற்கு இது ஆரம்பமாக இருக்கும்.
“எனவே, தற்போதைய சமூகம் எதிர்நோக்குகின்ற பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்க உலகளாவிய ரீதியிலே நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
“குறிப்பாக, இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு என தனியான ஒரு அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது .அதே போல மாகாண, மாவட்ட மட்டங்களில் திணைக்களங்கள் கூட செயற்படுகின்றன. அனைவரும் ஒன்றிணைந்து இந்த பெண்கள் சிறுவர் துஷ்பிரயோகங்களை இல்லாதொழிப்பதற்கு நாம் இன்றைய மகளிர் தின நிகழ்வில் தயாராகவேண்டும்.
“இத்துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
29 Apr 2025
29 Apr 2025