Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 டிசெம்பர் 12 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து வழக்கொன்றுக்காக யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அழைத்துவரப்பட்ட சிறைக் கைதி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் வியாழக்கிழமை (12) காலை இடம்பெற்றுள்ளது.
நாவற்குழி ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த 40 வயதான இரத்தினசிங்கம் சந்திரகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
குறித்த கைதி பல்வேறு குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட வழக்குகளில் தொடர்பு பட்டவர் என பொலிஸார் மற்றும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிதர்ஷன் வினோத்
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago