Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Niroshini / 2021 டிசெம்பர் 02 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் எரிவாயு அடுப்பு - சிலிண்டரை இணைக்கும் குழாய் எரிந்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
நல்லூர் கோவில் வீதியில் உள்ள வீடடொன்றில், இன்று (02), மதிய உணவு தயாரித்துக் கொண்டிருந்த போது, எரிவாயு அடுப்பு - சிலிண்டரை இணைக்கும் குழாய் தீப்பற்றி எரிந்துள்ளது.
இதை அவதானித்த வீட்டு உரிமையாளர், வெளியில் ஓடிச்சென்று, முன்னால் இருந்த வர்த்தக நிலையத்தினரை அழைத்துள்ளார்.
இதன்போது, உடனடியாக ஓடிச் சென்ற வர்த்தக நிலையத்தினர், எரிவாயு சிலிண்டரை அகற்றி தீயை அணைத்தமையால் பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படாது தடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .