Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2022 மார்ச் 13 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.தில்லைநாதன்
மக்கள் நலன்கருதிய பிரதேச அபிவிருத்திகளை முன்னெடுக்கும் செயற்பாடுகளின் போது, யாழ். மாவட்டச் செயலகம் அவற்றைக் கட்டுப்படுத்தி, தனது தன்னிச்சையான செயற்பாடுகளை திணிக்க முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணள் தெரிவித்தார்.
இதற்காக யாழ். மாவட்ட செயலகத்தை நாளை (14) முற்றுகையிட்டு கண்டன போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்களுக்கு அவசியமானதும் முன்னுரிமையிலானதுமான திட்டங்களை மக்களிடமிருந்து நேரடியாக பெற்று அவற்றை செய்து கொடுப்பதே தற்போதைய தேவையாக உள்ளது.
“ஆனால், யாழ் மாவட்ட அபிவிருத்திகளை பிரதேச ரீதியாக முன்னெடுக்கும்போது, அரசாங்கத்தால் ஏற்கெனவே வெளியிடப்பட்ட சுற்றுநிருபங்களை கணக்கில் கொள்ளாது, தன்னிச்சையான செயற்பாடுகளில் மாவட்ட செயலகம் ஈடுபட்டுவருதால் மக்களின் அவசிய தேவைகள் புறக்கணிக்கப்படுவதை மக்கள் பிரதிநிதிகளான எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
“குறிப்பாக, பிரதேச சபையை மையப்படுத்திய அபிவிருத்தித் திட்டங்களில் மக்கள் பிரதிநிதிகள் முழுயாக புறக்கணிக்கப்படும் நிலை யாழ். மாவட்டத்தில் மட்டும் காணப்படுகின்றது.
“அத்துடன், மக்களின் நலன்கள் அனைத்தும் மக்களின் விருப்புக்கமைவான தெரிவுகளாகவே இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். ஆனால், யாழ் மாவட்டத்தில் மாவட்டச் செயலகம் சொல்வது ஒன்று; செய்வது ஒன்றாகக் காணப்படுகின்றது” என்றார்.
8 minute ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
4 hours ago
6 hours ago