2025 மே 24, சனிக்கிழமை

ஜெபித்துக் கொண்டிருந்த மூதாட்டி அடித்துக் கொலை

Freelancer   / 2022 பெப்ரவரி 22 , பி.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

யாழ்ப்பாணம், இராசாவின் தோட்டப் பகுதியில், தனிமையில் இருந்து ஜெபித்துக் கொண்டிருந்த மூதாட்டியொருவர், இன்று (22) மதியம் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு அடித்து படுகொலை செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த காணிக்கையம்மா ஜெயசீலி பூபதி (வயது 72) என தெரிவிக்கப்படுகிறது.
 
கதிரையில் இருந்து ஜெபித்துக் கொண்டிருந்த பொழுது குறித்த மூதாட்டி பின் பக்கமாக வந்த மர்ம நபர்களால் அவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். 

கொள்ளையிட வந்தவர்களே இதனைச் செய்திருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X