2025 மே 24, சனிக்கிழமை

தடுப்பூசி வழங்கலில் வவுனியா பின்தங்கல்

Editorial   / 2022 பெப்ரவரி 22 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவதற்காக தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் துரித கதியில் இடம்பெற்று வருகின்றபோதிலும், வவுனியா மாவட்டத்தில் சுகாதாரத் தரப்பினால் மூன்றாவது தடுப்பூசி வழங்கும் பணி தாமதமடைவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளரால் வவுனியா பிராந்திய சுகாதார பணிப்பாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில், 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மூன்றாம் கட்ட தடுப்பூசி சனத்தொகை அடிப்படையில் 29.6 சதவீதமாகவே காணப்படும் நிலையில், இவ் அளவு மட்டம் 70 சதவீதமாக காணப்பட்டருக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், இவ்வாறான அடைவு மட்டமானது எதிர்மறையான விளைவுகளை மாவட்டத்துக்கு மட்டுமன்றி, நாட்டிற்கே ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X