Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 மே 30 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, பொதுமக்களுக்கான கொவிட் -19 தடுப்பூசி வழங்கப்படும் நிலையங்களுக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.
அந்த வகையில், யாழ். மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில், கொவிட் -19 தடுப்பூசி செலுத்தும் நிலையமான அரியாலை பிரப்பன்குளம் மகாமாரியம்மன் திருமண மண்டபம், கைதடி ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் தடுப்பூசி வழங்கும் நிலையத்துக்கும் கோப்பாய் ஆதார வைத்தியசாலை தடுப்பூசி வழங்கும் நிலையம், பருத்தித்துறை - கரவெட்டி ஆகிய பகுதிகளில் தடுப்பூசி வழங்கும் நிலையங்கள் ஆகியவற்றுக்கு, விஜயத்தை மேற்கொண்டு, தடுப்பூசி வழங்கல் தொடர்பில் சுகாதார பிரிவினருடன் கலந்துரையாடினார்
தடுப்பூசி நிலையங்களை பார்வையிட்ட பின்னர், சுகாதார அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, யாழ்ப்பாணம் மட்டுமல்ல கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு ஆகிய இடங்களிலும் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதன் காரணமாக, முதல் கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்தில், இந்தத் தடுப்பூசிகளைப் மக்களுக்கு விநியோகிக்கும் செயற்பாட்டை விரைவாக முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்
அத்துடன், இந்த முதல்கட்ட தடுப்பூசியை விரைவாக வழங்காத விடத்து, அடுத்த இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்படும். எனவே, உடனடியாக தடுப்பூசி வழங்கும் நிலையங்களை அதிகரித்து, மிகக் குறைந்த நாள்களில் இந்த 50,000 தடுப்பூசியையும் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
பொலிஸ், இராணுவத்தினரின் உதவியுடன் மேலும் பல தடுப்பூசி வழங்கும் நிலையங்களை விஸ்தரித்து, விரைவில் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள முதல்கட்ட 50,000 தடுப்பூசிகளை மக்களுக்கு விநியோகிக்குமாறு சுகாதார பிரிவினருக்கு அறிவுறுத்தினார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago