Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2021 ஜூலை 13 , பி.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் - சுன்னாகம் ஸ்கந்தவரோதயா ஆரம்பப் பாடசாலை அதிபர், நேற்று முன்தினம் (11) திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 9ஆம் திகதியன்று, ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டபோது அவரும் தடுப்பூசி பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், ஏற்கெனவே இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, யாழ்.குடாநாட்டில் 50 ஆயிரம் பேருக்கு 2 கட்டங்களாக தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. அதேபோல அடுத்த 50 ஆயிரம் பேருக்கு இரண்டாம் கட்டமாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும், தடுப்பூசி போட்டவர்களிடையே ஆபத்தான சம்பவங்கள் எவையும் பதிவாகவில்லை என சுகாதாரத் துறையினர் கூறுகின்றனர்.
மேலும் நோய் பாதிப்புகள் இருப்போர் தமது நோய் நிலை குறித்து வைத்தியர்களுக்கு தெரியப்படுத்தி தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதால் பாதிப்புகளை முற்றாகத் தவிர்த்துக்கொள்ள முடியும் எனவும் சுகாதாரத் துறையினர் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
11 minute ago
56 minute ago
1 hours ago