Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், தினசரி மாலை 6 மணிக்குப் பின்னர் இயங்கும் கல்வி நிலையங்கள் மீது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் கூறினார்.
யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனுக்கும் நல்லூர் திருஞானசம்மந்தர் ஆதின முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று, இன்று (03) முற்பகல் 11.30 மணியளவில் நடைபெற்றது.
இதன்போதே, அங்கஜன் இராமநாதன் எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, பலதுறை நிபுணர்களைக் கொண்ட அபிவிருத்திக் குழு ஒன்று, ஆயர் இல்லத்தால் உருவாக்கப்பட்டது. இதற்கமைய, அக்குழுவின் பிரதிநிதியான யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டீன் பெர்ணான்டோ ஞானப்பிரகாஷம் ஆண்டகையை, சனிக்கிழமை (01) அங்கஜன் இராமநாதன் எம்.பி சந்தித்து, கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
அதைத் தொடர்ந்து, இன்று (03), நல்லூர் திருஞானசம்மந்தர் ஆதின முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
48 minute ago
56 minute ago