Editorial / 2022 ஜனவரி 18 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.நிதர்ஷன்
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 13 பேரின் விளக்கமறியல் பெப்ரவரி 1ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 20ஆம் திகதி கைது செய்யப்பட்ட இம்மீனவர்கள், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் மறுநாளே ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், மூன்றாவது தவணையாக குறித்த வழக்கு, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் இன்று (18) எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 13 மீனவர்களின் விளக்கமறியலை எதிர்வரும் பெப்ரவரி 1ஆம் திகதி வரையில் நீதவான் நீடித்து உத்தரவிட்டார்.
16 minute ago
1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago
2 hours ago
4 hours ago