Editorial / 2020 ஒக்டோபர் 02 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளராக வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப. சத்தியலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் பொதுச்செயலாளராக செயற்பட்டு வந்த முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராஜசிங்கம் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்ததை அடுத்து, பொதுச்செயலாளர் பதவி வெற்றிடமாக காணப்பட்டு வந்தது.
இந்நிலையில் கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்காக, கட்சி மட்டத்தில் பொதுச்செயலாளரொருவரை நியமிக்கும் பொருட்டு துணைத்தலைவர்களாக செயற்பட்டு வந்த வைத்தியகலாநிதி ப. சத்தியலிங்கம் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரில் ஒருவரை பொதுச்செயலாளராக நியமிக்க உத்திதேசிக்கப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம், தமிழரசுக்கட்சியின் பொதுச்சபை கூடும் வரையிலும் துணைத்தலைவராக செயற்பட்டு வந்த
ப. சத்தியலிங்கம் பொதுச்செயலாளராக செயற்படும் வகையில் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago