Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Editorial / 2019 ஜனவரி 03 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
“தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய தீர்வொன்றையே நாங்கள் கேட்கின்றோம். அதற்கே எங்கள் ஆதரவையும் வழங்கத் தயாராக உள்ளோம். ஆனாலும் ஒற்றையாட்சி தான் தீர்வென்றால் அதனை நாங்கள் ஆதரிக்கத் தயாரில்லை. அதனை நிச்சயமாக எதிர்ப்போம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
யாழிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடியதான தீர்வொன்றைத் கொடுப்பதற்கு தெற்கிலுள்ள கட்சிகள் தயாராக இல்லை. தமிழர்களுக்கு தீர்வைக் கொடுத்தால் தமது கட்சி தேர்தல்களில் தோல்வியைச் சந்திக்கும் என்ற அச்சம் நிறைந்த எண்ணமே அவர்களிடத்தே மேலோங்கியிருக்கின்றது.
அதன் வெளிப்பாடே ஐக்கிய தேசியக் கட்சியின் அண்மைய கருத்துக்களும் ஆகும். அது மட்டுமல்லாமல் இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடியில் தீர்வைக் காண முடியுமென்றும் நாங்கள் நம்பவில்லை. அதற்காக அந்த முயற்சிகளைக் கைவிட முடியாது என்பதால் தொடர்ந்தும் அந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றோம்.
அதேநேரம் ஒருமித்த நாடு என்ற அடிப்படையிலேயே அப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போது, இல்லை அது ஒற்றையாட்சி அடிப்படையில் தான் என்று ஐக்கிய தேசியக் கட்சி கூறி வருவதால் எவ்வாறான தீர்வாக அது அமையப் போகிறது என தெரியாது. ஆனாலும் எது எப்படி இருந்தாலும் ஒற்றையாட்சியின் அடிப்படையிலான ஒற்றையாட்சித் தீர்வை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதே எங்களது நிலைப்பாடாக இருக்கின்றது.
ஆகையினால் ஐக்கிய தேசியக் கட்சியினரின் கருத்துக்கள் தொடர்பில் அவர்களின் உண்மையான நிலைப்பாடுகளை அறிவதுக்காக நாங்கள் அவர்களுடன் பேச உள்ளோம். அதன் பின்னர் நாங்கள் கூட்டமைப்பாக கூடி ஆராய்ந்து எமது முடிவுகளை வெளிப்படுத்துவோம் என்றார்.
இன்றைய சூழ்நிலையிலே பல்வேறு குழப்பகரமான நிலைமைகள் இருக்கின்ற போது தமிழர்களுக்கு தீர்வு வருமென்று நான் எதிர்பார்த்தால் என்னுடைய அரசியல் அறிவு பூச்சியமென்றே நினைப்பேன். ஏனென்றால் தென்னிலங்கையில் இன்று இருக்கக் கூடிய சூழ்நிலை அல்லது அரசியல் குழப்பங்களால் ஒரு சரியான தீர்வை நோக்கி நாங்கள் பயணிக்க முடியுமென்று நான் நம்பவில்லை” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
50 minute ago
54 minute ago
57 minute ago