Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2022 ஜனவரி 13 , மு.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். நிதர்ஷன்
தற்போதைய அரசாங்கம் ஒரு தோற்றுப் போன அரசாங்கம் எனவும், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களும் தோற்று விட்டார்கள் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர்களின் ஏற்பாட்டில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க் கட்சித் தலைவர் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாஸ மேலும் தெரிவிக்கையில்,
“ஒரு நாட்டின் அரசாங்கமானது மக்களில் அத்தியாவசியமான தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியதாக செயற்பட வேண்டும். வெளிநாட்டில் இருந்து பொருட்களைக் கொள்வனவு செய்து இந்த மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்க முடியாது இந்த அரசாங்கம் திண்டாடுகிறது.
தேர்தல் காலத்தில் பல்வேறுபட்ட வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து தற்பொழுது மக்கள் வாழ முடியாதுள்ளார்கள்.
குறிப்பாக உணவு, பானங்களை நாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை காணப்படுகின்றது. அரசாங்கத்துக்கு எதுவுமே செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. பொதுவாக குழந்தைகள் தாய்மாருடைய போசாக்கு மட்டம் குறைந்திருக்கிறது.
அவர்களுக்குரிய பால் மா மற்றும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இந்த கோட்டாபய அரசாங்கம் காணப்படுகின்றது.
மக்கள் வாழ்வதற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு காணப்படுகிறது. நாட்டுக்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. ஆனால், வெற்றிகொள்வதற்கு வீர தீரமான அரசாங்கம், புத்திசாலித்தனமான அரசாங்கம் எனக் கூறி தற்பொழுது அரசாங்கம் பலமில்லாத அரசாங்கமாக மாறியுள்ளது.
இந்த அரசாங்கம் முற்றுமுழுதாக பெயிலான அரசாங்கம் என்று தான் கூற வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக ஒரு பலமான அரசாங்கத்தை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும்.
குறிப்பாக நமது ஆட்சியில் இனவாதம், மதவாதம் மற்றும் ஒரு துண்டு நிலம் கூட வேறு நாட்டுக்கு கொடுக்காத சிறந்த ஒரு நாட்டை உருவாக்குவதற்கு அனைவரும் நாங்கள் ஒன்றுபட வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago