2025 மே 19, திங்கட்கிழமை

தவறான முடிவால் கைதியொருவர் வைத்தியசாலையில்

எம். றொசாந்த்   / 2018 ஒக்டோபர் 28 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதியொருவர் தவறான முடிவெடுத்து, உயிரை மாய்க்க முற்பட்டவேளை சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் காப்பாற்றப்பட்டு இன்று (28) யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

யாழ்.உரும்பிராய் பகுதியை சேர்ந்த இராஜேஸ்வரன் கஜன் (வயது 23) என்ற இளைஞரே உயிரை மாய்க்க முற்பட்ட வேளை சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் காப்பற்றப்பட்டுள்ளார்.

குறித்த நபர் திருட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

விளக்கமறியலில் உள்ள தன்னை உறவினர்கள் எவரும் பார்க்க வருவதில்லை என்ற மன விரக்தியில் குறித்த நபர் காணப்பட்டார் எனவும் அதனாலயே தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க முற்பட்டுள்ளார் எனவும் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X