Freelancer / 2022 ஏப்ரல் 12 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதீபன்
கோப்பாய் பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட கோண்டாவில் தில்லையம்பலம் பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சந்தைக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று அதிகாலை கோண்டாவில் தில்லையம்பலம் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்த திருடன் பெருமதியான கைத்தொலைபேசி மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை திருடிச் சென்று இருந்தார்.
சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அவர்களின் கீழ் இயங்கும் விசேட புலனாய்வு போலிஸார் , சந்தேகநபரை கைது செய்ததுடன் திருடிய பணம் மற்றும் கைத்தொலைபேசியினையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். (R)
3 minute ago
13 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
13 minute ago
22 minute ago