Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
வடக்கு - கிழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பில் தீர்வினை கோரி, மீள் குடியேற்ற வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதியிடம் நேற்று காலை கையளிக்கப்பட்டது.
விழுதுகள் ஆற்றல் மேம்பாட்டு மய்யத்தின் அனுசரணையில் “நிலைமாறு கால நீதிக்காய் எங்களின் குரல்கள்” எனும் தொனிப்பொருளில் பாதிக்கப்பட்ட பெண்களின் அன்றாட பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல், யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் அமைந்துள்ள லக்சுமி மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் போர் முடிவடைந்த பின்னர் பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான மனுவை, விழுதுகள் ஆற்றல் மேம்பாட்டு மய்யத்தின் சிரேஷ்ட உறுப்பினர் சி.கோமதி மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் சிவஞானசோதியிடம் கையளித்தார்.
காணி பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை, சமூகத்தில் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள், மாற்றுத்திறனாளிகள் பிரச்சினை, முன்னாள் போராளிகளின் பிரச்சினைகள் போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இனியும் காலம் தாமதிக்காது இனியாவது விரைந்து தீர்வை வழங்க வலியுறுத்தி கோரிக்கை மகஜர் ஊடாக விடுக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
16 May 2025