Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 02 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் ரவிசாந்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பதவிக்கான தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பதவிக்கான தேர்தலை டிசெம்பர் 28ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் காரணமாக, மேற்படி தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு, ஒக்டோபர் மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்ட நிலையில், ஒன்பது பேர் அப்பதவிக்கு விண்ணப்பம் செய்திருந்தனர்.
எனினும், நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் காரணமாக, குறித்த தேர்தலை நடத்துவதில் இழுபறிநிலை நீடித்து வந்தது.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், சனிக்கிழமையன்று (30) கூடிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவையினர், விண்ணப்பதாரிகளின் தகுதிகளை மதிப்பிடுவதற்கும் துணைவேந்தர் தேர்தலை நடத்துவதற்கான திகதியைத் தீர்மானிப்பதற்கும், மூவரடங்கிய குழுவொன்றை நியமித்தனர்.
இந்தக் குழு, தனது அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கவுள்ள நிலையில், டிசெம்பர் 28ஆம் திகதியன்று, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தேர்தலை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
எனினும், அண்மையில் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தால், டிசெம்பர் 18ஆம் திகதியளவில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில், ஜனவரி மாதம் முதல் பல்கலைக்கழகங்களின் பேரவைகளும் கலைக்கப்பட்டு, புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படலாமெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கலைக்கப்படும் பேரவையால் நடத்தப்படும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான தேர்தல், சட்ட வலுவுடையதாகவிருக்குமா எனும் கேள்வி தற்போது எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
41 minute ago