Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 29 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் ஆளுகைக்குள் கொண்டு வருவதற்கு, தெல்லிப்பளை வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் எதிர்ப்பை வௌடுவதெனத் தீர்மானித்தனரென, நலன்புரிச் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் பா.சுரேஷ் குமார் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில், நேற்று (28) நலன் புரிச் சங்கத்தினர் கூடி ஆராய்ந்ததற்கமையவே, இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், அவர் கூறினார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கடந்த காலத்தில், நடைபவனி மூலம் சேகரிக்கப்பட்ட பணத்தில் வடக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்ட ஒரேயொரு புற்றுநோய் வைத்தியசாலையாக இந்த வை்ததியசாலை காணப்படுவதாகத் தெரிவித்தார்.
இந்நலையில், இந்த வைத்தியசாலையை மத்திய அரசின் ஆளுகைக்குட்பட்ட யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதை, தாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் கூறினார்.
ஏனெனில், மத்திய அரசாங்கத்தின் கீழ் செல்லும்போது இங்கே பல நிர்வாக சிக்கல்கள் தோன்றுவதற்குரிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றனவெனவும், அவர் கூறினார்.
எனவே. இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
46 minute ago
47 minute ago
5 hours ago