2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

தொடரும் கையெழுத்து போராட்டம்

Editorial   / 2022 பெப்ரவரி 17 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் , எஸ்.நிதர்ஷன், டி.விஜித்தா

பயங்கரவாத தடைச் சட்டத்தை தடை செய்யக்கோரிய கையெழுத்து போராட்டம், அச்சுவேலி பிரதான பஸ் நிலையத்தில் இன்று (17) காலை இடம்பெற்றது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இளைஞர், யுவதிகள் விசாரணை இன்றி கைது செய்யப்பட்டு, நீண்டகாலமாக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மிகவும் மோசமான சட்ட ஏற்பாடுகளை கொண்ட பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ச்சியான கையெழுத்துப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த கையெழுத்து போராட்டத்தில் கிராமங்கள் தோறும் பொதுமக்களின் கையெழுத்து பெறப்படுகின்றன.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான அணியினர், நேற்றையதினம் பொதுமக்களிடம் இருந்து கையெழுத்தைப் பெற்றுக் கொண்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .