Editorial / 2019 பெப்ரவரி 21 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
மேல்மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க இன்று (21) காலை யாழ்ப்பாணத்துக்கு விஐயமொன்றை மேற்கொண்டுள்ளார்.


இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்தை மையமாக கொண்டு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைகளை பார்வையிட்டதுடன் புதிய அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்திருந்தார்.
இன்று (21) யாழ்ப்பாணத்துக்கு விஐயம் மேற்கொண்ட அமைச்சர் யாழ் புகையிரதம் நிலையம் முன்பாக ஆயிரம் மரக்கன்றுகள் நாட்டும் நிலையான திட்டத்தை ஆரம்பித்து வைத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து யாழ் நீதிமன்றத் தொகுதிக்கு முன்பாக யாழ்ப்பாண நிர்வாக தொகுதிக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். இதன் பின்னர் தூர சேவை பஸ் தரிப்பிடத்திற்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்தார்.
இந் நிகழ்வுகளில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள் அரச அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
13 minute ago
23 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
23 minute ago
35 minute ago