2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

நடமாடும் சேவை ஏமாற்று வேலை

Editorial   / 2022 பெப்ரவரி 27 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

வவுனியாவில் இடம்பெற்று வரும் காணிப் பிரச்சனை தொடர்பான நடமாடும் சேவையால் மக்கள் தீர்வைப் பெற்றுக்கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், அதனை தீர்ப்பதற்கு அமைச்சரவை நேரடியாக கையாளும் வழிமுறையை ஏற்ப்படுத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று (27) இடம்பெற்ற காணி தொடர்பான நடமாடும் சேவையில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், இந்த நடமாடும் சேவை என்பது வரவேற்க்கதக்க விடயம். ஆனால், எமது மக்கள் இச்சேவையிலே நம்பிக்கை அற்றுப்போய் இருக்கின்றார்கள். தொடர்ச்சியாக அந்தந்த பகுதிகளின் பிரதேச செயலாளர்கள் மக்களுக்குச் சொல்லும் பதிலையே இப்போதும் சொல்லப்போகின்றார்கள். எனவே, மக்கள் இதில் தீர்வைப்பெற்றுக்கொள்ள முடியும் என்பதில் வாய்ப்பே இல்லை.

 “இந்த நடமாடும் சேவைகள் தொடர்ச்சியாக ஒரே தவறையே விட்டுக்கொண்டிருக்கின்றது. அதனை நிறுத்துவதென்றால் அமைச்சரவை ஒரு தீர்மானத்துக்கு வரவேண்டும். இந்த காணிப் பிரச்சனையை நேரடியாக கையாளுகின்ற ஒரு வழிமுறையை அவர்கள் செயற்படுத்த வேண்டும்.

“அத்துடன், வட மாகாண காணி ஆணையாளருக்கு, இந்தக் காணி பிரச்சினையை தீர்ப்பதற்கான காணிக்கச் சேரியை நடத்துவதற்கு தாங்கள் அதிகாரம் வழங்கியிருப்பதாக சொல்லியிருக்கின்றார்கள். அது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. அப்படி அதிகாரம் வழங்கியிருந்தால், வட மாகாண காணி ஆணையாளர் எமது மக்களின் பிரச்சனைகளை உண்மையில் தீர்த்திருக்கவேண்டும். காணிக் கச்சேரியை நடத்தியிருக்கவேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

“குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கில் தான் காணி பிரச்சினைகள் தீர்க்காமல் இருப்பதான குற்றச்சாட்டை அமைச்சர் முன்வைத்துள்ளார். உண்மையில் அது எமக்கு ஒரு தலைகுனிவுதான்.

“இந்த நடமாடும் சேவை என்பது ஏமாற்றுகின்ற விடயமாகதான் இருக்கிறது. காணிப் பிரச்சினைகளை முழுமையாக காணி அமைச்சே கையாளவேண்டும்.

“ஆகவே, பிரதேச செயலகங்களில் மக்கள் சென்று களைப்படைந்த நிலையில் மீண்டும் அதே அதிகாரிகளை எமது மக்கள் சந்தித்துப் பேசுவதென்பது தீர்வாகாது” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .