Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழர் பிரதேசங்களில் விகாரைகள் அமைத்தல் உட்பட பௌத்த மேலாதிக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை ஆட்சேபித்தும் இந்து ஆலயங்கள் பாதிப்புக்குள்ளாவதானால் அச்சமடையும் இந்துக்களின் மண உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்கிலும் அமைதி வழியிலான மௌன பேரணி 3 ஆம் திகதி காலை 9மணி தொடக்கம் 10மணி வரை நல்லை ஆதீன முன்றலில் இடம்பெறவுள்ளது என இந்து அமைப்புகளின் ஒன்றியத்தின் உபதலைவர் சீ. வீ. கே. சிவஞானம் தெரிவித்தார்.
மேற்படி விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
இந்த பேரணி எந்தவொரு அரசியல் கட்சியும் சார்ந்தது அல்ல என்பதை தெரிவித்துக்கொள்வதுடன் இது இந்து அமைப்புகளின் ஒன்றியம் மற்றும் இந்து சமயபேரவை ஆகியவை இணைந்து முன்னெடுக்கும் நிகழ்வாகும்.
இந்து அமைப்புகளின் ஒன்றியத்தின் உபதலைவர் என்ற வகையில் சகல சைவ பெருமக்கள் அனைவரையும் ,ந்த பேரணியில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றேன். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
16 May 2025