2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நாதஸ்வர வித்துவானின் வீட்டில் கொள்ளை

Editorial   / 2018 ஒக்டோபர் 17 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

திருநெல்வேலி பகுதியில், அண்மையில், நாதஸ்வர வித்துவானின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், 11 பவுண் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.

பாற்பண்ணை பகுதியில் உள்ள நாதஸ்வர வித்துவானின் வீட்டுக்குள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகாலை ஒரு மணியளவில் முகத்தைக் கறுப்பு துணியால்  மூடி கட்டியவாறு உட்புகுந்த மூன்று கொள்ளையர்கள், குறித்த கொள்ளையில் ஈடுபட்டனர்.

வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், வித்துவானிடம் கத்தியைக் காட்டி அச்சுறுத்தி, வித்துவானின் கழுத்தில் இருந்த 11 பவுண் சங்கிலியை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில், கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X