Princiya Dixci / 2022 மார்ச் 15 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
மூன்று மாத நாய்க்குட்டியின் நகக் கீறல் காரணமாக, பண்டத்தரிப்பு, தம்பித்துரை வீதியைச் சேர்ந்த காருண்யசிவம் ஆனந்தராசா (வயது 48) எனும் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
மேற்படி குடும்பஸ்தரின் வீட்டில் வளர்க்கப்பட்ட மூன்று மாத காலம் நிரம்பிய நாய்க்குட்டி ஒன்று அவரை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனது நகத்தால் கீறியுள்ளது.
இவ்வாறு நகத்தால் கீறி, இரண்டு நாள்களின் பின்னர் அந்நாய்க்குட்டி உயிரிழந்துள்ளது.
இந்நிலையில், நாய்க்குட்டி நகத்தால் கீறியதற்கு உரிய முறையில் சிகிச்சை பெறத் தவறியிருந்த குடும்பஸ்தர், நீர் வெறுப்பு நோய் அறிகுறிகளுடன் உடல் நலக் குறைவுக்கு உள்ளாகியுள்ளார்.
அதை அடுத்து அவரை, சங்கானை வைத்திய சாலையில் குடும்பத்தினர் அனுமதித்த நிலையில், அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று (14) குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
5 minute ago
9 minute ago
14 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
9 minute ago
14 minute ago