2025 மே 05, திங்கட்கிழமை

நினைவேந்தல் நிகழ்வுக்கு எதிராக மீளவும் விண்ணப்பம் தாக்கல்

Niroshini   / 2020 நவம்பர் 25 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

பருத்தித்துறை நீதிமன்ற நியாயதிக்கத்துக்கு உட்பட்ட பகுதிகளில், நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை, மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி, பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில், இன்று (25) மீளவும் பொலிஸாரால் விண்ணப்பங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த விண்ணப்பங்கள் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி ஆகிய 3 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பிரதிவாதிகளாக முன்னர் தாக்கல் செய்யப்பட்டு மீளப்பெறப்பட்ட விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த விண்ணப்பங்கள் இன்று பிற்பகல் மன்றில் அழைக்கப்பட்ட நிலையில் , கட்டளைக்காக நாளைய தினம் திகதியிடப்பட்டது.

இதேவேளை, முன்னதாக 3 விண்ணப்பங்கள் கடந்த வியாழக்கிழமை  பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு, திங்கட்கிழமை (23) மீளப்பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X