2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

நெடுந்தீவு கடற்பகுதியில் கேரள கஞ்சா சிக்கியது

Mayu   / 2024 டிசெம்பர் 08 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். நெடுந்தீவு கடற்பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 126 கிலோ 300 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை வசபா நிறுவனத்திற்கு சொந்தமான கரையோர ரோந்து கப்பல்கள் சனிக்கிழமை (07) நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நாற்பத்து நான்கு (44) பொலித்தீன் பொதிகள் மிதப்பதை அவதானித்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அங்கு, குறித்த கஞ்சாப் பொதி கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், கஞ்சா கையிருப்பை தரையிறக்கும் போது கடற்படை நடவடிக்கை காரணமாக கைவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்த கஞ்சா கையிருப்பின் பெறுமதி சுமார் 50 மில்லியன் ரூபாவாக இருக்கும் என கடற்படை தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X