2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

நெடுந்தீவு மீனவர் தமிழகத்தில் சடலமாக மீட்பு

Niroshini   / 2021 ஜூலை 07 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

ஒரு வாரமாக காணாமல் போயிருந்த நெடுந்தீவு மீனவர், தமிழகம் - வேதாரணியம் கடற்கரையில், இன்று (07) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நெடுந்தீவு - 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சில்வஸ்டார் மரியதாஸ் என்ற மீனவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர், கடந்த 1ஆம் திகதி முற்பகல் 10 மணியளவில், நெடுந்தீவு கடற்கரையிலிருந்து கட்டுமரம் ஒன்றில் தொழிலுக்குச் சென்ற நிலையில், காணாமல் போயிருந்தார்.

இந்நிலையில், அவரது சடலம், தமிழகம் - வேதாரணியம் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X